"கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 
stalin

கல்வித்துறையில்  நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

dpi building

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 

519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,

22,931 'Smart' வகுப்பறைகள்,

புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.

நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!  என்று குறிப்பிட்டுள்ளார்.