திமுக அரசு தனது இந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும்!" - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

 
1 1

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதிருப்பதாவது;-

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை திமுக அரசு இடிக்க முயற்சித்ததோடு, அதைத் தடுக்க வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியமின் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

மதச்சார்பின்மை என்னும் போர்வையில் கோவிலைக் காக்க வந்த பக்த கோடிகளைத் தாக்குவது, குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற மறுப்பது, அறுபடைவீட்டை சுடுகாட்டுடன் ஒப்பிடுவது, திருத்தேரோட்டத்தில் வைத்து பக்தர்களை வசைபாடுவது, கோவிலுக்குச் செல்வதை அநாகரீகம் என்று இழிவுபடுத்துவது, அடிப்படை அறிவின்றி சனாதன தர்மத்தைக் கொடூர நோய்களுடன் ஒப்பிடுவது எனத் தொடர்ந்து இந்து விரோதப் போக்கைக் கைவிடாது தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு தனது இந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.