பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

வரும் 4ம் தேதி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திகு. எடப்பாடி பழனிசாம் அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.9.2023 - ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
10.8.2023 அன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் தீர. எடப்பாடி 16. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.