வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

 
வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தொர் எண்ணிக்கை 5 பேர் உயிரிழந்தனர்.

Image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில்  சென்ற போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து அரசு பேருந்து மீது நேருக்கு  நேர் மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு கிராமிய போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 64 பேர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி பலியான அரசு பேருந்து ஓட்டுநர் உளுந்தூர் பேட்டையை பகுதியை சேர்ந்த ஏழுமலையாகும், மேலும் வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியா சேர்ந்த முஹம்மத் பைரோஸ்(தனியார் சொகுசு பேருந்து நடத்துநர்), சித்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், கோலர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான முகமது நதீம், மற்றும் சென்னையை சேர்ந்த  கிருத்திகா என்ற பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து

விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் திரைமலதா நகர கழக செயலாளர் சாரதி குமார் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி கூறிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு கேட்டுக்கொண்டனர்.

மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த  கிருத்திகா தனது இருகுழந்தைகளுடன் பெங்களூரில் இருந்த சென்னை சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.