மரக்காணம் அருகே கள்ளச்சாயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..

 
மரக்காணம் அருகே கள்ளச்சாயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..


விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாரயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிக் குடித்த அந்த கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தனர்.

dead

மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து  எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து  2 காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.  இந்த நிலையில்  விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதனால் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.