நாளை மறுநாள் தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க.ஆர்ப்பாட்டம்..!

 
vijay

த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம் ஆகியவற்றை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.