நீதிமன்றம் அதிரடி..! விபத்தில் கணவன் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு..!

 
court

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (61), கடந்த 2023ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி தனது மனைவி ஜோதிகா (49) மற்றும் மகள் ஷோபிகா (26) ஆகியோருடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் இருந்து காரில் சென்னை நோக்கி பயணம் செய்தார். அப்போது இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே வந்தபோது, அதே பாதையில் வந்த ஐச்சர் சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பாஸ்கரும், அவரது மகள் ஷோபிகாவும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். ஜோதிகா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இதையடுத்து, தனது கணவர் உயிரிழப்புக்கு ரூ.1.78 கோடி, மகள் உயிரிழப்புக்கு ரூ.49 லட்சம் மற்றும் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி ஜோதிகா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனித்தனியாக  3 வழக்​கு​களைத் தொடர்ந்​தார்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை சிறு வழக்​கு​களுக்​கான முதன்மை நீதி​மன்ற நீதிபதி ஏ.நசீர் அகமது, ‘இந்த விபத்து சரக்கு லாரி ஓட்​டுநரின் கவனக்​குறைவு, அலட்​சி​யப் போக்கு மற்​றும் அதிவேகத்​தால் நிகழ்ந்​துள்​ளது..

உயி​ரிழந்த பெண் மருத்​து​வர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ரூ. 1.14 லட்​சம் ஊதி​யம் வாங்கி வந்​துள்​ளார். மருந்​தகம் நடத்தி வந்த பாஸ்​கர் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்​பா​தித்​துள்​ளார். காயமடைந்த மனு​தா​ர​ரான ஜோதி​கா​வும் தன் பங்​குக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்​பா​தித்து வந்​துள்​ளார்.

இந்த விபத்​துக்கு கார் ஓட்​டுநரின் அதிவேகமே காரணம் என்ற சரக்கு லாரி காப்​பீடு செய்​யப்​பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறு​வனத்​தின் வாதம் ஏற்​புடையதல்ல. மனு​தா​ரர் இந்த விபத்​தில் தனது மகள் மற்​றும் கணவரை பறி​கொடுத்​ததுடன் மட்​டுமல்​லாது அவரும் 34 சதவீதம் அளவுக்கு ஊனமடைந்​துள்​ளார்.

எனவே அவரது மகளின் இறப்​புக்கு ரூ. 1 கோடியே 29 லட்​சத்து 89 ஆயிரத்து 800, கணவரின் இறப்​புக்கு ரூ. 17 லட்​சத்து 24 ஆயிரம், மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு ரூ. 13 லட்​சத்து 58 ஆயிரத்து 300 என மொத்​தம் ரூ. 1 கோடியே 60 லட்​சத்து 72 ஆயிரத்து 100--ஐ தனியார் இன்​சூரன்​ஸ் நிறு​வனம் 7.5 சதவீத வட்​டி​யுடன்​ வழங்​க வேண்​டும்​’ என உத்தரவிட்டுள்ளார்.