மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி அடையாற்றில் வீசிய தம்பதி

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை கைது செய்தது போலீசார்.
சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் கட்டிட வேலை, ஓட்டலில் வேலை செய்து வருபவர். கடந்த 17 ஆம் தேதி விஜயா வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகள் லோகநாயகி பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 19 ஆம் தேதி லோகநாயகி தனது தாயார் விஜயாவை காணவில்லை என எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், “கடந்த 17 ஆம்தேதி வீட்டில் இல்லை நானும் வேலைக்கு சென்று விட்டேன். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் விஜயாவை காணவில்லை. ஓட்டல் வேலைக்கு அவர் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நீண்ட நேரமாக வரவில்லை. வீட்டை விட்டு சென்ற போது அவர் வெள்ளை நிற புடவையில் பூ போட்ட பதிவு செய்யப்பட்ட புடவை கழுத்தில், பால்நிறமணி மற்றும் ஒரு சவரன் கம்பல காதில் போட்டு இருந்தார். அவர் சுறுக்கு பையில் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை வைத்திருந்தார். சிவப்பு நிரம் ஜாக்கட் போட்டு இருந்தார்" என்று புகாரில் லோகநாயகி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எம்ஜிஆர் போலீசார் காணவில்லை என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜயா தேடினர். இந்த நிலையில் விஜயாவின் வீட்டின் அருகில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும் படி போலீசார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர். ஆனால் பார்த்திபனோ தனது மனைவி சங்கீதாவோடு சேர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது செல்போன் டவர் சிக்னலை வைத்து தேடினர். விருதுநகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதன் பிறகு விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு பார்த்திபன்- சங்கீதா தம்பதியை கைது செய்தனர்.
இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு விரைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி விஜயாவை கணவன்- மனைவியான பார்த்திபன், சங்கீதா துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு உடலை மூட்டை கட்டி பைக்கில் அடையாற்றில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிய வில்லை. கைதான கணவன்- மனைவி இருவரையும் சென்னை கொண்டு வந்து விசாரித்த பிறகு தான் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.