பிறந்தவுடன் இறந்த குழந்தையை மருத்துவமனையிடமே வழங்கிய தம்பதி

 
baby leg

புதுச்சேரியில் தொற்றுப் பாதிப்பால் பிறந்து ஐந்து நாளில்‌ இறந்த குழந்தை உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜிம்பருக்கு தானமாக வழங்கிய, தம்பதியை ரெட் கிராஸ் சொசைட்டி பாராட்டியது.

jipmer

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிப்பிரியா இரண்டாவது கர்ப்பமான கவி பிரியாவிற்கு கடந்த மாதம் 21ஆம் தேதி ஜிப்மரில் சுகப்பிரசவத்தில், 2.8 கிலோ இடையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த நாளை காய்ச்சல் அதிகரித்தது. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவியில் இருந்த குழந்தையின் ரத்த மாதிரிகள் பரிசோதித்த போது தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25ஆம் தேதி குழந்தை இறந்தது. 

பின் குடும்பத்தினரின் அனுமதியுடன் இறந்த குழந்தையின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜிப்மருக்கு தானமாக வழங்கினர். இறந்த குழந்தை உடலை தானமாக வழங்கிய தம்பதியரின் சேவை அறிந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தம்பதி மணிகண்டன் கவிப்பிரியாவை வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டியது.