லாபமே இல்லாமல் முதல்வர் அலுவலகம் மாற்றும் பணிக்கு டெண்டர் எடுத்த நிறுவனம்?

 
அ

முதல்வர் அலுவலகம் மாற்றும் பணிக்கு 31% மைனஸில் ஒப்பந்த நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

Image

பொதுப்பணித்துறை சார்பில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான  3 பணிகளாக பிரித்து அரசு  ரூ.5.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விட்டது. இதில் ஐந்து நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 31% மைனஸ் அதாவது நிர்ணயிக்க மதிப்பை விட குறைவாக ரூ.3.78 கோடிக்கு டெண்டர் கோரிய ஈரோட்டை சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு குறைவான மதிப்புகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள டெண்டர் விட்டது கிடையாது. அப்படி குறைந்த ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்து தேர்வு செய்யப்படும் நிறுவனம் தரம் இல்லாமல் தான் பணிகளை மேற்கொள்ளும். தரமான பொருட்களை கொண்டு கட்டுமான நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கையில் பொதுப்பணித்துறை எப்படி இது போன்று குறைந்த மதிப்பு கொண்ட நிறுவனத்தை தேர்வு செய்தது என்று தெரியவில்லை.

டெண்டர் விடும்போது இந்த தொகையில் பணிகள் மேற்கொள்ள முடியுமா என்பதை பொதுப்பணித்துறை ஆராய்ந்து தான் நிறுவனத்தை தேர்வு செய்வது வழக்கம். அதற்காக தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் குறைந்த ஒப்பந்த புள்ளியின் கோரி டெண்டர் எடுப்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு லாபம் வரப்போவதில்லை. இதனால் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் தான். அப்படி இருக்கும்போது தமிழ்நாடே உற்றுநோக்கம் முதல்வர் அலுவலகம் மாற்றும் பணிக்கான டெண்டர் குறைந்த ஒப்பந்தப் புள்ளி எடுக்கப்பட்டுள்ளதால் தரமாக இப்ப பணியை செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.