அண்ணா சிலை கூண்டு மீது ஏறி படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்த குடிமகன்!

புதுக்கோட்டை அண்ணா சிலை கூண்டில் மேல் படுத்து அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த சேர்ந்தவர் நாகராஜன். இவர் மது போதையில் புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி அலப்பறையில் ஈடுபட்டவாறு, கால் மேல் கால் போட்டு கொண்டு படுத்துக்கிடந்துள்ளார். இது குறித்து நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது போதையில் இருந்த நாகராஜனை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் நாகராஜன் கூண்டின் மேல் படுத்து கொண்டு கீழே இறங்காமல் அடம்பிடித்தவாறு இருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் நாகராஜனை வலுக்கட்டயமாக கீழே இறக்கினார். அப்போது நாகராஜன் தடுமாறி விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செய்திக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக பேசிய போதை ஆசாமி நாகராஜன், தனது தேத்தாம்பட்டி கிராமத்திற்கு இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என்றும் இதை கண்டித்து கூண்டின் மேல் ஏறி போராட்டம் செய்ததாகவும் தெரிவித்தார்.
தூங்க வேற இடமே கிடைக்கல போல..! அண்ணா சிலை கூண்டு மீது ஏறி படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்த குடிமகன்.. போராடி கீழே இழுத்து வந்த போலீஸ்..#Pudukottai | #DrunkMan | #Police | #ViralVideo | #Annadurai | #PolimerNews pic.twitter.com/ISxvnAv25u
— Polimer News (@polimernews) July 29, 2024