முதல்வரின் அதிரடி ஆக்ஷன்! களமிறங்கும் 'சிங்கப்பெண்' படை..!!
முதல்வராக பொறுப்பேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட 3 முக்கிய கோப்புகளில் சிங்கப்பெண் திட்டமும் அடங்கும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது; முதற்கட்டமாக போலீஸ் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் படையில், ஐஜி,எஸ்பி, டிஎஸ்பி 2 பேர், காவல் ஆய்வாளர்கள் 4 பேர், எஸ்ஐக்கள் 8 பேர், பிற தரவரிசை காவலர்கள் 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக, இந்த சிறப்புப் படை இயங்கும்.
குறிப்பாக, பஸ் ஸ்டாப், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அதிரடிப்படையின் இருப்பு அதிகப்படுத்தப்படும். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் இந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும்.
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

