குழந்தையாக மாறிய முதல்வர்! வைரலாகும் வீடியோ!

 
11

சென்னை தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றதாக விஜயை, நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் முதல்வர் விஜயை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வியட்நாம் நாட்டின் வின் குழுமத்தைச் சேர்ந்த ஆசிய வின் குழும நிர்வாக இயக்குநர் பாம் சான் சாவ் மற்றும் குழு நிர்வாகிகள் இன்று (13-07-26) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது,  பாம் சான் சாவ் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மாதிரி பொம்மை காரை முதல்வருக்கு பரிசாக அளித்தார். அந்த பொம்மை காரை வாங்கிய முதல்வர் விஜய், அதன் கதவுகளை திறந்து ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.