காவலரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்

 
காவலரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்

கோவையில் குட்கா கடத்தி காரில் தப்பியவர்களை துணிச்சலாக பிடித்த தலைமை காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.


கோவை கோவில்பாளையம் அருகே செக்போஸ்டில் இன்று காலை போலீசார் சோதனைக்காக வெள்ளை நிற காரை (KA05 MG 7692) நிறுத்த முயன்றபோது, காரில் இருந்த கும்பல் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றது. மப்டியில் இருந்த தலைமை காவலர் வேல்முருகன் சுதாரித்து காரின் மேற்கூரை மீது ஏறிய நிலையில், கும்பல் காரை நிறுத்தாமல் அவிநாசி மெயின் ரோடு, கணியூர் டோல்கேட் என வேகமாக சென்றது. சில கிலோ மீட்டர் தூரம் உயிரை பணயம் வைத்து கார் மேல் படுத்தபடி பயணித்த அந்த துணிச்சல் மிகு காவலரின் செயலால், ஒருவழியாக அவிநாசி பகுதியில் கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது. சோதனையில் காரில் 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. ராஜஸ்தான் கும்பலைச் சேர்ந்த 2 பேர் சிக்கினர், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உயிரை துச்சமென நினைத்து கடமையாற்றிய அந்த தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில் காரின் மேற்கூரையில் ஏறி சுமார் 40 கி.மீ. தூரம் பயணித்து குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய தலைமைக் காவலர் வேல்முருகனின் இந்தத் துணிச்சலான செயலைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.