ஜனநாயகனில் முதல்வரின் சைகை - இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம்

 
s

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இருக்கிறது என இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் ஹெச். வினோத் கூறுகையில், “முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகுதானே சட்டமன்றத்திற்குள் வந்தார். படத்தில் செய்த சைகையை வேண்டுமானால் சட்டமன்றத்தில் செய்தார் என்று சொல்லலாம். 400 கோடி ரூபாய் மதிப்புள்ள படத்தை வேண்டுமென்றே லீக் செய்திருந்தால், அதை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? அப்போது விஜய் சார் மத்தியிலும், மாநிலத்திலும் எந்த அதிகாரத்திலும் இல்லை. விஜய் தரப்பே படத்தை லீக் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, வெறும் அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் விமர்சனம்தான்.

ஜனநாயகன் படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் வந்தது. படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும் படக்குழுவுக்கு எப்போதும் துணையாக நின்றார்கள். என்ன ஆனாலும் நான் உங்களோடு நிற்பேன் என்று விஜய் சாரிடம் கூறினார் தயாரிப்பாளர். ஜனநாயகன் பிரச்னைக்கு விஜய் பேசியிருந்தால், அதையும் விமர்சித்திருப்பார்கள். ஜனநாயகன் படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்தது வருத்தம்தான். முதலில் U/A கொடுத்தார்கள். ஆனால் இப்போது 'A' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக முறையிட எங்களுக்கு போதிய அவகாசம் இல்லை” என்றார்.