"தொண்டை வலியை விட தொண்டே முக்கியம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
stalin

தொண்டை வலியை விட தொண்டே முக்கியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் விழாவில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பேசியபோது,  உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது . தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்கக் கூடாது என்பதால் உங்களை நான் சந்திக்க இங்கு வந்து விட்டேன் .

stalin

கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது.   காய்ச்சல் போனாலும் தொண்டை வலி உள்ளது. இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னாலும்,  உங்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை . மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர்.  மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.  சொன்னதை செய்வோம் அதன் அடையாளமே மகளிர் உரிமைத் தொகை திட்டம். சொன்னதை செய்ததால் உங்கள் முன் தைரியமாக நிற்கிறேன்.நவம்பர் மாதத்திற்காக கலைஞர் உரிமைத்தொகை இன்று மாலைக்குள் வரவு வைக்கப்படும் . பலர் முடியாது என்று கூறிய திட்டத்தை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் என்றார்.