2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணை

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணையை நடத்துகிறது. 2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குறிப்பு வழக்கு பதிவு செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மனுவை ஏற்று அவர்களை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுவித்தது.இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.