மதுபோதையில் செம ஸ்பீட்! வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்

 
Accident

சென்னையில் இடப்பற்றாக்குறை காரணமாக வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது ஏறிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அசோக் நகரில் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக வாசலில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். சரிதா என்பவரது வீட்டு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருக்கின்றனர். அப்போது வீட்டில் இடமில்லாததால் சிலர் வெளியே உறங்கியுள்ளனர். அப்போது கூகுள் மேப்பை நம்பி முட்டு சந்துக்குள் நுழைந்த கார், அவர்கள் மீது ஏறி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய வட மாநிலப் பெண் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்த விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் கால்கள் மீது கார் ஏறியுள்ளது. இதில் 2 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், “செம ஸ்பீடா கார் ஓட்டிட்டு வந்தாங்க... அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தோம்... 7 பேரு மேல காரை ஏத்திட்டி அந்த பொண்ணு நிக்காம போயிட்டே இருக்காங்க... முட்டு சந்து இல்லையென்றால் தப்பித்து ஓடிப்போயிருப்பார். மதுபோதையில் அந்த பெண் இருந்தார். முதலில் குழந்தை மீதுதான் காரை ஏற்றினார். பிறகு அடுத்தடுத்து படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றினார்” என்றனர்.