சாலையோரம் காரை நிறுத்தி கடையில் டீ குடித்த போது தீப்பிடித்து எரிந்த கார்

மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரப்பேடு கூட்ரோட்டில் உள்ள 99 Coffee என்ற காபி கடையில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரைப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் 5 பேர் சேலம் சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அச்சரப்பாக்கம் அருகே அரப்பேடு கூட்ரோடு என்ற இடத்தில் உள்ள 99 Coffee தனியார் காபி ஷாப்பில் தனது குடும்பத்துடன் சென்று உணவுஅறிந்து கொண்டிருந்த பொழுது அப்பொழுது திடீரென காபி ஷாப் முன்பு நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
இதனால் கடை மூடப்பட்டு அங்கே இருந்த மற்ற கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீப்பற்றி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரியின் தீயை அணைத்தனர். கார் முழுமையாக எரிந்து தீ கரையானது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.