அடுத்தடுத்து விழும் பாரம்..! - பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
"மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது மத்திய பா.ஜ.க. அரசு! ஏற்கனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது மத்திய அரசு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
— M.K.Stalin (@mkstalin) May 15, 2026
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின்… https://t.co/z2wSUqNZ4p
அதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

