அன்று 'நான் யார் தெரியுமா.. கனிமொழி எம்பி பிஏ ஓட தம்பி'.. இன்று மன்னிப்பு கேட்டு வீடியோ

 
ஃப்

மது போதையில் கோவை போக்குவரத்து காவலரிடம் தகராறு ஈடுபட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ  வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கிரண், பாலாஜி, சிவா ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று முன்தினம் காரில் கோவை வந்தனர். அப்போது காந்திபுரம் 100 அடி சாலையில் வந்த போது, போக்குவரத்து போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.  அப்போது காரில் இருந்த மூன்று பேரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போக்குவரத்து காவலர் விசாரித்த போது தான் கனிமொழி எம்.பி உதவியாளரின் உறவினர் என்று கூறி, போலீஸாரை மிரட்டி தகராறில் ஈடுபட்டனர். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிறகு அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பினையில் விடுவித்தனர். இந்நிலையில் கனிமொழி எம்பி உதவியாளர் யார் என்று தெரியாது எனவும்,  தனது நண்பர் ஒருவருக்கே அழைத்து ஏமாற்றினேன்.  இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என இளைஞர்கள் கிரண்,  பாலாஜி, சிவா ஆகியோர் மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.