லிவ் இன் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ஆண் நண்பர்

 
ஆபாச படம் ஆபாச படம்

திருமணம் செய்யாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை வீடியோவை வைத்து மிரட்டிய ஆண் நண்பர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவர் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சிராஜூல் இஸ்லாம் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 8 மாதங்களுக்கு முன்னர் சிராஜுல் இஸ்லாமின் நடவடிக்கைகள் பிடிக்காததால், தற்போது அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சிராஜுல் இஸ்லாம் அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சேர்ந்து வாழ வருமாறும் இல்லையென்றால், இருவரும் சேர்ந்து இருந்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சிராஜுல் இஸ்லாமை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.