பெண் கேட்டு தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்ற காதலன்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் வசிக்கும் மின்சாரத் துறையில் பணியாற்றும் தமிழ் என்பவரின் மகள் விஜயஸ்ரீ யை மர்ம கும்பல் காரில் பெற்றோர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவி விஜயஸ்ரீ ஏ.கே. சமுத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை கல்லூரியை முடித்து விட்டு பேருந்தில் சிங்களாந்தபுரம் ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் சக மாணவி ஒருவருடன் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ECCO காரில் வந்த சிலர் விஜயஸ்ரீ மாணவியை மட்டும் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இது குறித்து உடன் வந்த சக மாணவி பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடம் வராததால் ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். காரில் கடத்திச் சென்றவர்கள் குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து பெற்றோரை சமாதானப் படுத்தினார். இதனையடுத்து போலீஸார் அப்பகுதியில் சிசிடிவி கேமரா போன்றவைவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காரில் கடத்திச் சென்ற நபரும் மாணவியும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், பெண் கேட்டு தராததால் மாணவியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள காரில் அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த போதும் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வெளியூர் செல்கிறார்கள் என தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் செல்போன் டவர் சிக்னலை கொண்டு கார் எங்கு உள்ளது என போலீசார் கண்டறிந்து மாணவியை கடத்திய கும்பலை காருடன் ஓசூரில் மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனைவியை கடத்திய தமிழ்ச்செல்வன், கார்த்திக், தமிழ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட மாணவியை 12 மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு நாமக்கல் எஸ்பி பாராட்டினார்.