தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி

 
தொட்டில் சேலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை சேலை இருக்கியதால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிமம்:தொட்டில்-சேலை-குழந்தை-3.jpg - தமிழ் விக்கிப்பீடியா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில்,நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன்- ராமலட்சுமி தம்பதியினர். இவர்களது வீட்டிற்கு உறவினர் முறையைச் சேர்ந்த சிவகாசி காக்கிவாடன் பட்டியை சேர்ந்த பாலகுரு, ராஜலட்சுமியின் மூத்த மகன் மதுபாலன் (வயது12) ஆகியோர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு முன்புறமுள்ள வேப்பமரத்தில் சேலையில் தொட்டில் கட்டி சிறுவன் மதுபாலன் விளையாடிக் கொண்டிருந்தபோது, கழுத்தில் சேலை சுற்றி இருக்கியதால் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளான். உறவினர்கள் சிறுவனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.