ஜாதி சங்கங்களை துாண்டிவிட்டு குளிர் காயும் கேடுகெட்ட அரசியலை தான் திராவிடம் செய்கிறது - பா.ஜ.க கடும் விமர்சனம்..!!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலில், ஜாதி, பணம், ஆள் பலம்தான் முக்கிய காரணிகளாக இருந்தன.
மொத்தத்தில் ஜாதியை ஒழித்து விட்டோம் என கூவுகிற தமிழகத்தில், ஜாதி இல்லையேல் அரசியல் இல்லை.
ஜாதி வெறி பிடித்த, எதிலும் ஜாதி என பரவியிருக்கிற மாநிலம் தமிழகம் என்றால், அதில் சந்தேகமே இல்லை. ஜாதியே அரசியல், பணம், வாழ்க்கை, அதிகாரம் என்பது தான், திராவிட மாடல். தங்கள் அதிகாரத்திற்காக, சொத்து குவிப்பிற்காக, குடும்ப முன்னேற்றத்திற்காக, ஜாதிய அரசியல் என்று கட்டமைக்கப்பட்டது தான் திராவிட மாடல்.
ஜாதி என்பது ஒவ்வொரு சமுதாய வாழ்க்கை முறை; ஜாதி ரீதியாக கட்டமைக்கப்பட்டது தான் சமுதாயம் என்பதை மறைத்து, கலப்பு மணம் தான் ஜாதியை ஒழிக்கும் மந்திரக்கோல் என்ற பொய்யை பரப்பி, சாலைகளில் பெரியோர்களின் பெயர்களில் இருந்த ஜாதி பெயரை நீக்கி, ஜாதியை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டது. மறுபுறம் கட்சியில் ஜாதிக்கொரு பதவி,
ஆட்சியில் ஜாதி ரீதியிலான பொறுப்புகள், அரசு நிர்வாகத்தில் ஜாதி ரீதியாக நியமனங்கள் என வழங்கி, ஜாதி சங்கங்களை துாண்டிவிட்டு குளிர் காயும், கேடுகெட்ட அரசியலை தான், 60 ஆண்டுகளாக திராவிடம் செய்கிறது. ராமானுஜரின் சீர்திருத்தம், பாரதியாரின், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தொலைநோக்கு பார்வை, ராஜாஜியின் தீண்டாமை ஒழிப்பு, அம்பேத்கர் முன்னெடுத்த சமத்துவம் ஆகியவற்றை மறைத்து, ஜாதிய அரசியலை புகுத்திய திராவிட மாடல் அரசி யல் தான்,
2026 சட்டசபை தேர்தல். ஜாதி, பணம் ஆகிய இரண்டும் தான், இனி தமிழக அரசியல் பாதை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

