திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

 
1

பெளர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்து, சிவ வழிபாடு செய்வது, கிரிவலம் செல்வம், விரதம் இருப்பது, புனித நீராடுவது ஆகியவை விசேஷ பலன்களை தரக் கூடியதாகும். பாவங்களை போக்கி, பெரும் புண்ணியத்தை தருவதுடன் சிவனின் அருளையும் தரக் கூடியதாகும். அதிலும் நினைத்தாலே முக்தியை தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு.

அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமிகளில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன் தரக் கூடியதாகும். ஐப்பசி.கார்த்திகை பெளர்ணமி எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல் சித்ரா பெளர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சித்ரா பவுர்ணமி வருகிற 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறன்றனர்.