24 மணி நேரத்தில் தடை நீக்கம்.. மீண்டும் ENRICA மதுவுக்கு அனுமதி..!
என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு மாறாக லேபிளிங் மற்றும் தயாரிப்புப் பெயரிடலில் குளறுபடிகள் இருந்ததாகவும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் (Natural Identical and Artificial Flavoring Substances) சேர்க்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் 11 மதுபான வகைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
தடை நீக்கப்பட்ட 11 மதுபான வகைகள்:
- என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (Enrica Old Indie Classic Dark Rum)
- விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி (VSOP Exshaw Gold Brandy)
- லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி (Louis Vernant XO Blended Premium Brandy)
- மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (McDowell's VSOP Brandy - Blended Brandy)
- நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (No.1 McDowell's Fine Brandy - Indian Brandy)
- என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி (Enrica VSOP Select Brandy)
- என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி (Enrica Platinum Reserve XO Brandy)
- என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (Enrica Premium French Brandy)
- வீரன் ஸ்பெஷல் பிராந்தி (Veeran Special Brandy)
- ஹனி பீ ஃபைன் பிராந்தி (Honey Bee Fine Brandy - Indian Brandy)
- மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (Men’s Club Deluxe Brandy)
இந்த நிலையில், என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. FSSAI மீண்டும் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுபானங்கள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தடை விதிக்கப்பட்டதும், பின்னர் அந்த தடை நீக்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

