முதல்வர் விஜய் 'பாமணி' பங்களாவை தேர்வு செய்தன் பின்னணி? ஜோதிடர் சொன்ன ரகசியம்

 
a

தமிழக முதல்வர் விஜய், தனது சொந்த வீடான நீலாங்கரையில் இருந்து, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவான பாமணி' இல்லத்திற்கு முகாமை மாற்றியுள்ளார். 

புதுப்பிக்கப்பட்ட இந்த பங்களாவுக்கு தனது கட்சி பெயரையும், வெற்றியின் அடையாளத்தையும் குறிக்கும் வகையில் 'வெற்றி இல்லம்'* என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவம்பர் 5-ம் தேதி முதல் அங்கிருந்தே 3 மணி நேரம் கோப்புகளில் கையெழுத்திட்டு அரசுப் பணிகளை தொடங்கியுள்ளார். நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு 18 கி.மீ பயணம், டிராபிக் நெரிசலை தவிர்க்கவே இந்த மாற்றம் என தமிழக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. 

ஆனால் உண்மையான பின்னணி சோழர் கால ஜோசிய ரகசியம்! கிரீன்வேஸ் சாலையில் பல பங்களாக்கள் இருந்தும் ஏன் இந்த 'பாமணி'-யை மட்டும் விஜய் தேர்வு செய்தார் தெரியுமா? 'பாமணி' என்பது சாதாரண பெயர் இல்லை! இது காவிரியின் முக்கிய கிளை நதி! பிற்கால சோழர்களின் எழுச்சிக்கே இந்த பாமணி ஆறு தான் காரணம். விஜயாலய சோழன், பாமணி ஆற்றின் நீர்ப்பாசன வளத்தை வைத்து விவசாயத்தை செழிக்கச் செய்தார். அதில் கிடைத்த வருவாயை வைத்து படையை பலப்படுத்தி, பிற்கால சோழப் பேரரசு என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இப்படி ஒரு மாபெரும் ஆட்சியின் தொடக்கமே பாமணி ஆறு தான். 

"பிற்கால சோழர்கள் எப்படி பாமணி ஆற்றின் வளத்தை வைத்து சாம்ராஜ்யம் அமைத்தார்களோ, அதே போல விஜய்யும் தமிழக அரசியலில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்! எனவே 'பாமணி' என்ற பெயர் கொண்ட பங்களாவே அவருக்கு ராசியான தேர்வு!" என விஜயின் ஜோதிடர் ஆலோசனை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் தான் மற்ற பங்களாக்களை தவிர்த்து விட்டு, சோழர் கால ராசி + நிர்வாக வசதி என இரண்டும் சேர்ந்த இடமாக 'பாமணி' தேர்வு செய்யப்பட்டுள்ளது.