மாணவர்களே ரெடியா? கல்விச் சுற்றுலா அறிவிப்பு வெளியானது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் மாணவர்களுக்காக பிரத்யேக கல்விச் சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்விச் சுற்றுலா (Educational Tour) என்பது மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை, நேரடியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்த்து அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா ஆகும். வரலாற்று இடங்கள், அறிவியல் மையங்கள், தொழிற்சாலைகள்,
இயற்கை வளங்கள், விவசாயப் பண்ணைகள் உள்ளிட்டவற்றிற்கு கல்வி சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் மாணவர்களுக்காக பிரத்யேக கல்விச் சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் தலங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு அனுபவக் கல்வி பெறலாம் என அறிவிகக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் http://ttdcbooking.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

