'முதல் தலைமுறை பட்டதாரிகள் நல்ல வேலைக்கு செல்வதே நோக்கம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
stalin

 'முதல் தலைமுறை பட்டதாரிகள் நல்ல வேலைக்கு செல்வதே நோக்கம்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

tn

 தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் வேலைவாய்ப்பு திட்டம் 2024'-ன் மூலம் சேலம், கள்ளக்குறிச்சி அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.  2022-23 நிதியாண்டில், இத்திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர் என்று ஆங்கில செய்தித்தாளில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மனநிறைவு தரும் செய்தி!

இந்த வெற்றிப் பயணம் தொடரும்...

தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.