திசை மாறிய 'அக்வான்' புயல்! தமிழகத்திற்கு தப்பித்த கண்டம்.. ஆனால் நவம்பர் 23-ல் காத்திருக்கும் பேராபத்து!

 
Q

நெல்லூர்- விசாகப்பட்டினம் இடையே அக்வான் புயல் கரையை கடக்கும் என ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், மச்சிலிப்பட்டினம் - பூரி இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை மாற்றத்தால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 20ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 23ல் 15 மாவட்டங்களுக்கும், நவம்பர் 24ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* நாகை

* திருவாரூர்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* விருதுநகர்

* மதுரை

 தேனி

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நவம்பர் 24ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* நாகை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* புதுக்கோட்டை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.