டெண்டரில் அதிகாரிகள் முறைகேடு- நீர்வளத்துறை செயலாளருக்கு பாதிக்கப்பட்ட நிறுவனம் பரபரப்பு புகார்

 
vijay

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் அதிகாரிகள் தலையிட்டு, விதிமுறைகளுக்கு மாறாக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அஜய் பில்டர்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை டெண்டரில் முறைகேடு நீர்வளத்துறை செயலாளருக்கு பாதிக்கப்பட்ட நிறுவனம் பரபரப்பு புகார் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வழித்தடங்கள் தூர்வாரும் பணிக்கு டெண்டர் விட்டதில் அதிகாரிகள் தலையிட்டு முறைகேடு செய்ததாக பாதிக்கப்பட்ட அஜய் பில்டர்ஸ் நிறுவனம் நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளது. 

அந்த கடிதத்தில் ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் வேண்டுமென்றே அதிகாரிகள் சில நிபந்தனைகளை விதித்து டெண்டரில் பங்கேற்க விடாமல் செய்ததாகவும், மேலும் குறுகிய கால டெண்டரில் அதுவும் ஏழு நாட்களில் அதிகாரிகள் காண்ட்ராக்டர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே அலைகழித்து தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டதாகவும் கூறி நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்காவிட்டால் அந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.