அதிரடி காட்டிய தவெக..500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர் ரத்து..!!

 
Q

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் கண்டறிந்தால் ரத்து செய்து வருகிறது.

அதன்படி பல்வேறு துறைகளின் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது.

தற்போது ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள், நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடியவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும். அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மின்சார பஸ்களை வாங்குவதற்கும், அதற்கு கண்டக்டர்களை நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதியில்லை. இதனால் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்க ஒப்புதல் கோரி கடிதம் எழுதியுள்ளோம், அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த வாரம், ஹிந்து சமய அறநிலையத்துறை, பல்வேறு கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நீதிமன்றத் தடையாணைகள் மற்றும் கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.