நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டும் செயல்.. ரூ.2000 நோட்டுகள் செல்லாதது குறித்து கே.எஸ்.அழகிரி சாடல்

 
ks alagiri


மோடிக்கு கருப்புப் பணம்  எவ்வாறு உருவாகிறது என்று தெரியவில்லை , அவரிடம் பொருளாதார அறிஞர்கள்  இல்லை எனவும்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.    

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை  ராஜீவ் யாத்திரை நடைபெற்றது. கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட ஜோதியானது பல இடங்களில் பயணித்து சென்னை வந்தடைந்தது.  சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி, “ ரூ. 2000  நோட்டு செல்லாது என மோடி அறிவித்துள்ளார் என்ன கொடுமை இது.  இரண்டு வருஷத்துக்கு முன்பு  இதேதான் கொண்டு வந்தார்கள். எந்த புத்திசாலி இந்த காரியத்தை செய்வார்.  சிறு மதிப்புள்ள ரூபாய் நோட்டை செல்லாததாகி பெரிய மதிப்புள்ள நோட்டை கொடுத்தீர்கள். நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற செயல்.

modi

இன்று திரும்பவும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்துள்ளீர்கள். கர்நாடகா தேர்தல் வரை காத்திருந்தார்கள்;  நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருந்திருப்பார்கள்.  ஆனால் கர்நாடகா தேர்தல் தோல்வியால் முடிவை மாற்றிக்கொண்டு உடனே  அறிவித்துள்ளார்கள். இப்பொழுது கருப்பு பணத்தை ஒழித்து அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பீர்களா?  செல்வந்தர்கள் அனைவருமே பணம் வைத்து கொள்ள மாட்டார்கள்;  நடுத்தர மக்கள் மட்டுமே சிறிய தொகையாக வைத்திருப்பார்கள்.

money

கருப்பு பணம் எவ்வாறு உருவாகிறது என்று மோடிக்கு தெரியவில்லை. காரணம்  அவரிடம் பொருளாதார அறிஞர்கள் இல்லை. பொருளாதாரத்தை பற்றி அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  பண பரிமாற்றத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் ரசீது இல்லாமல் விற்பனை செய்தால், வெள்ளை பணம்  கருப்பு பணமாக மாறுகிறது.

 சிறு வியாபாரிகள் நடுத்தர வாசிகள் மட்டுமே சிறு தொகையாக 2000 ரூபாய் இருக்கிறது. இவர்கள் இதை வங்கியில் கொண்டு சென்று மாற்றுவதற்குள்  பெரும் சவாலாக மாறிவிடும். மோடி  குழப்பத்தை உருவாக்குகிறார். இன்று மோடி தர்பார் துக்ளக் தர்பாராக மாறிவிட்டது . ராகுல் காந்தி இப்பொழுது ஒரு காந்தியாக காமராஜராக உருவெடுத்து காட்சி அளிக்கிறார்” என்று தெரிவித்தார்.