அமைச்சர்களின் சாதனையா? செட்டில்மெண்டா? தமிழிசையின் ட்வீட்டால் அதிர்ந்து போன திமுக கூடாரம்!

 
1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான (StalinStatement-ஐ) அறிக்கையை அறிவிக்க இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று, இந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட திட்டங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி 'கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டுமானங்களில் காட்சி தொகுப்பு' எனும் தலைப்பில் தமிழ்நாடு அரசு காணொளி ஒன்றை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், ஸ்டாலின் ஸ்டேட்மென்ட் குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-


"'Stalin statement'... ஸ்டாலின் ஸ்டேட்மென்ட் என்று அமைச்சர்களின் சாதனையை சொல்ல சொன்ன முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே, எப்பொழுது

"Stalin settlement"...ஸ்டாலின் செட்டில்மெண்ட் மூலம் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை சொல்லப் போகிறீர்கள்??"


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.