ஆதவ் அர்ஜூனா மீது அதிருப்தி- கார்த்திக் மோகன் முன்னிலையில் திமுகவில் இணைந்த தவெக இளைஞர்கள்
வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் TVK வில் இருந்து 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் DMK வில் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழக கட்சிய சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைந்த இளைஞர்கள் அனைவரையும் கார்த்திக் மோகன் வரவேற்று உங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை இல்லத்தில் வந்து சந்திக்கலாம். உங்கள் குறைகளை என்னை நேரில் சந்தித்து சொல்லலாம் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் மோகன் பேசுகையில், “தமிழக வெற்றி கழக கட்சியில் சரியாக அணுகுமுறை இல்லை என்று அதிருப்தியில் இருந்தார்கள். யாராக இருந்தாலும் திமுகவில் இடம் உள்ளது என்று என்னிடம் சொன்ன பொழுது நான் கூறினேன். என்னை நம்பி வந்தால் வர சொல்லுங்கள் என்று கூறினேன். தற்பொழுது அனைவரும் வந்திருக்கிறார்கள் சந்தோஷமாக வரவேற்கிறேன். இளைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன்” என்றார்.
வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் ஏராளமான தவெகவினர் திமுகவில் இணைந்தனர்#MKStalin #DMK #villivakkam @Karthikmohandmk #Election2026 #ElectionwithTTN pic.twitter.com/uY2CBeIjwP
— Top Tamil News (@toptamilnews) April 17, 2026
தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த இளைஞர் கூறுகையில், “எங்களுக்கு விஜய்யை பிடிக்கும். ஆனால் அவருக்கு கீழே இருப்பவர்களை சந்திப்பது மிகவும் கடினமாக உள்ளது. கார்த்திக் மோகனை எளிமையாக அணுக முடிகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் ஆதார் அர்ஜுனா நிற்கிறார். ஆனால் அவரைச் சென்று அணுகுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. 20 பேரை தாண்டி தான் ஆதம் அர்ஜுனாவை அணுக முடியும். ஆதார் அர்ஜுனாவை பார்க்கவே முடியாது. தமிழக வெற்றி கழகம் உருவான போதில் இருந்து கட்சியில் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆதவ் அர்ஜுனாவை எளிமையாக நெருங்க முடியாது. கீழே இருப்பவர்கள் மற்றவர்களை நெருங்க விடாமல் தடுப்பதால் சோர்வு ஏற்படுகிறது. இதனால் கட்சி பணி செய்ய முடிவதில்லை. எல்லா மாவட்டங்களிலும் இதே போன்ற நிலை தான் உள்ளது” என்றார்.


