“கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேரமில்லாமல் 12 மணி நேர வேலை செய்ய உத்தரவிட்டதே விபத்துக்கு காரணம்”

 
ச் ச்

கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்காமல் 12 மணி நேர வேலை செய்ய உத்தரவிட்டதே கடலூர் ரயில் விபத்துக்கு காரணம் என  எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கஙகளை எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வீரசேகரன், “கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு முதுநிலை திருச்சி ரயில்வே கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ரயில்வே கேட் கீப்பர்களுக்கு 12 மணி நேர வேலைப்பார்க்க உத்தரவிட்டது தான் காரணம். எட்டு மணி நேரம் தான் பணி வழங்க வேண்டும் என விதி உள்ள நிலையில் அதை மீறி கேட் கீப்பர்களுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிட்டது தான் காரணம்” என குற்றஞ்சாட்டினார்.