17 முறை உலக சாம்பியன்... ஆனால் கடைசிப் போட்டியில் தோல்வி; ஜான் சீனாவின் உருக்கமான ஓய்வு!
Dec 15, 2025, 07:00 IST1765762204000
WWE மல்யுத்த போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் ஜான் சீனா.1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஜான் சீனா பிறந்தார். WWE மல்யுத்த வீரரான இவர், படங்கள், தொடர் நாடகங்கள், வீடியோ கேம்ஸ், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் நடக்கும் போட்டியே தன் கடைசி போட்டி என்றும், அதன் பிறகு ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருந்தார். அப்படி நடந்த போட்டியில் 'டேப் அவுட்' முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார்.
போட்டி முடிந்ததும், அவர் ரசிகர்களுக்கும், தன்னுடன் மோதிய வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஜான் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


