தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் அதிரடி கைது!
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கரூர் துயர சம்பவம் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி பெரும்பாக்கம் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆச்சர்யப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.


