அப்படியே நடந்துடுச்சு..! தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் - உடைத்து சொன்ன ஆற்காடு பஞ்சாங்கம்..!
தமிழகத்தில் தற்போது முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது.இது குறித்து பராபவ வருட 2026-2027, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளதாவது:
நடிகர் விஜய் தலைமையில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், ஆற்காடு பஞ்சாங்கத்தின் முன்கூட்டிய கணிப்புகள் தற்பொழுது அப்படியே பலித்துள்ளது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பராபவ வருஷத்து ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டு,, எதிர்க்கட்சியினர் ஓர் கூட்டணியில் அணிவகுத்து நிற்க நேரும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது..
பக்கம் 3ல், வருஷ பலன்கள் பகுதியில், 13வது வரியில், தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். கடைசி 22வது வரிசையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 13ம் பக்கத்தில் கடைசி 2 வரிகளில், நடிப்பு துறையில் உள்ள நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும், எதிர் கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.

