“உலக பிசியோதெரப்பி” தினத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து - ஈபிஎஸ்

 
ep

பிசியோதெரப்பிஸ்ட் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று  ஈபிஎஸ்  தெரிவித்துள்ளார்.

tn

பிசியோதெரப்பி என்று சொல்லப்படும் இயன்முறை மருத்துவம் முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தில்லா சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.
 


இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் , "மனிதகுல ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், சமூக அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக் கொள்ளவும் துணைபுரியும் பிசியோதெரப்பித் துறையையும், உடற்பயிற்சி சிகிச்சை சேவைகளையும் பயன்படுத்தி , உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தொடக்க நிலையிலையே கண்டறிந்து "வருமுன் காப்போம்" கொள்கையை கடைபிடித்து, நாம் அனைவரும்  உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டுமென இந்த  “உலக பிசியோதெரப்பி”  தினத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு, தன்னுடய கடும் உழைப்பால் மக்களின் உடல் நலம் காத்து வரும் பிசியோதெரப்பிஸ்ட் சகோதர சகொதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.