தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எப்பொழுதும் மக்களுடனே தான் இருப்பேன்- தங்கர் பச்சான்

 
தங்கர் பச்சான்

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எப்பொழுதும் நான் மக்களுடனே தான் இருப்பேன்! மக்களுடனே தான் இருக்கிறேன் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 35 ஆண்டுகளாக எனது எழுத்திலும், பேச்சிலும், திரைப்படங்களிலும் அரசியலை பேசிக்கொண்டிருந்தேன். காலம் என்னை கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கியது. போட்டியில் 2,05,244 வாக்குகளைப்பெற்று வெற்றி வாய்ப்பை நான் இழந்திருந்தாலும், கடந்த ஒன்பது நாட்களும் எவ்வாறெல்லாம் வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க சென்றேனோ அதேபோல் மக்களை சந்தித்து எனது நன்றியினை தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன். 

Image

வாக்குச்சேகரிக்க கூலிக்கு ஆட்களை கூட்டிச் செல்லாமல், மது வாங்கித் தராமல், வாக்குகளுக்கு பணம் தராமல் வாங்கிய வாக்குகள் இவைகள்.  தேர்தல் கள அரசியலில் எனக்கு கிடைத்துள்ள இந்த அனுபவம் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் திரைக் கலைஞருக்கும் கிடைக்கப்பெறாதவை! தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எப்பொழுதும் நான் மக்களுடனே தான் இருப்பேன்! மக்களுடனே தான் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.