மணிப்பூர் இளம் ஆட்சியரானார் தஞ்சை பெண்

 
மணிப்பூர் இளம் ஆட்சியரானார் தஞ்சை பெண்

2021 யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ஏஞ்சலின் ரெனிட்டா, தற்போது மணிப்பூரில் இளம் ஆட்சியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது கலெக்டராக சாதித்துள்ளார் நம் தமிழ் நாட்டு ஏஞ்சலின் ரெனிட்டா. தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை தனது ஏழு வயது முதலே லட்சியமாகக் கொண்டு, அதற்காக மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கிறார். தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்ற இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து முடித்தார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார்.

ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி, மணிப்பூரில் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.