எடப்பாடி பழனிச்சாமியால் மட்டும் அதிமுகவை வழிநடத்த முடியாது - தனியரசு பேட்டி!!

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.  அதே சமயம் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு அணிகளாக பிரிந்து தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக  அண்ணாமலை,  ஜி.கே. வாசன் மற்றும் தமமுக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டவரை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கோரி வருகிறார்.

tn

இந்நிலையில் ஓபிஎஸ் உடன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் சந்திப்பு நடந்துள்ளது.  இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தபட்டதாக தெரிகிறது.

tn

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, "அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு  வாழ்த்து கூறினேன் . ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கால், அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை இழந்துள்ளது. ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே கிடைக்காது. ஓபிஎஸ்-ஐ தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிற்கு வலிமை பெற செய்ய முடியாது. எடப்பாடி பழனிச்சாமியால் மட்டும் அதிமுகவை வழிநடத்த முடியாது எடப்பாடி பழனிச்சாமியை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்" என்றார்.