“ரூ.40 கோடி இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும்..”- தங்கர் பச்சான்

 
Thangar Bachan

நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள் இயக்குநரும் நடிகருமான தங்கர்பச்சான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக தங்கர் பச்சான் தனது எக்ஸ் தளத்தில், “நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள்! செலவழித்தப் பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள்! இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது?இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியதுதான்.அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.