பாமக சார்பில் போட்டியிட மறுப்பு? இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம்!

 
Thangarbachan
ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட மறுப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள இயக்குனர் தங்கர்பச்சான், "கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். 
இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்! " என பதிவிட்டுள்ளார்.