அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம்
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி, ஈரோட்டில் கட்சி நிர்வாகி ஒருவரது அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்தனர். 84 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டுவது, உள்ளாட்சித்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈரோட்டில் கட்சி நிர்வாகி ஒருவரது அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார். அதிமுகவின் மற்றொரு குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ் பி வேலுமணி,தங்கமணி, நத்தம் விசுவநாதன், சிவி சண்முகம் போன்றவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் யாரும் மாவட்ட செயலாளர்கள் இல்லை.

