"கடந்த 3 மாதங்களில் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் எப்படி வந்தது?” - தங்கம் தென்னரசு
கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக அரசின் கஜானாவுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதா..? எதனடிப்படையில் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிடுங்கள்..? அமைச்சர் மரியவில்சனுக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, “எங்களுடைய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறையை (revenue deficit) ரூ.48,696 கோடியாக கணக்கிட்டிருந்தோம். இந்த வருவாய் பற்றாக்குறையில் ஓய்வூதியத் திட்டத்திற்கான ரூ.11 ஆயிரம் கோடியையும் கணக்கில் எடுத்துதான் கணக்கிட்டோம். ஆனால், நீங்கள் ரூ.55,775 கோடி என்கிறீர்கள். அதுவும், ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதியை சேர்க்காமல் இந்த பற்றாக்குறை இருக்கிறது என்கிறீர்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக அரசின் கஜானாவுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதா..? எதனடிப்படையில் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிடுங்கள்..? தமிழக அரசின் கஜானாவுக்கு ரூ.15,000 கோடி எதன் வாயிலாக வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

