"திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இது" - தங்கம் தென்னரசு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு தொழில், கல்வி மற்றும் சமூக நலத்தில் முன்னேற்றமடைந்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறீக்கையில், “2024-25ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1.96 லட்சமாக உயர்ந்து, இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் செயல்படும் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மணிமகுடம். திராவிட மாடலின் திட்டங்கள் மற்றும் முதலீட்டு முயற்சிகள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளன. தேசிய சராசரியான ரூ.1.14 லட்சத்தைவிட தமிழ்நாடு பெரிதும் மேலோங்கியுள்ளது.83.3% வளர்ச்சி விகிதத்துடன், தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது.
அதிமக ஆட்சியின் இறுதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1.43 லட்சம் மட்டுமே இருந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 2024-25ல் ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


