'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்- தங்கம் தென்னரசு

 
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

 'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும் என தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.



மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தளப்பதிவை சுட்டிக்காட்டியுள்ள தங்கம் தென்னரசு, “தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்படக் கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றதைச் சான்றாகக் கொண்டு; மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து;  தலைவர் அவர்கள்  சுட்டிக்காட்டி இருப்பதைப் போல, 'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.